எங்களை அழிப்பதே ரஷ்யாவின் நோக்கம் – உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் நாட்டை அழிப்பதே ரஷ்யாவின் நோக்கம் என உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரஷ்யாவின் குண்டுவீச்சு மற்றும் வான் வழித்தாக்குதல்கள் மூலம் எங்கள் நாட்டை ரஷ்யா கைப்பற்றமுடியாது. எங்கள் நாட்டுக்குள் படைகளை அனுப்ப ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் தயாராகி வருகின்றது. இதற்கு எங்களிடம் செயற்கைக் கோள் ஒளிப்பட ஆதாரமுள்ளது.

மேலும் ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க பல மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. வெளிநாட்டிலிருந்து ஸ்டிங்கர் மற்றும் ஜெவெலின் ஏவுகணைகளை விரைவில் பெறவிருக்கிறோம். அத்துடன் துருக்கிய ட்ரோன்களுடன் மற்றொரு கப்பலும் நாட்டுக்கு வருகிறது என்றார்.

Spread the love