ஐ.நாவில் இலங்கை தொடர்பில் பிரித்தானியா கடும் விசனம்

சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஐ.நாவில் இலங்கை தொடர்பான விவாத்தில் பிரித்தானியா தனது கடும் விசனத்தை முன்வைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையடலை மையப்படுத்தி ஜெனிவாவில் நேற்றைய தினம் விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த விவாதங்களில் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து பிரித்தானியா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. பிரித்தானியா முன்வைத்த விமர்சனங்கள் வருமாறு.


“பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாதமை தொடர்பில் நீங்கள் வெளியிட்ட கரிசனையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். பல அடையாள மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் நாம் வருத்தம் தெரிவிக்கின்றோம். இழப்பீடுகள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பான அரசாங்க நிறுவனங்களில் நடந்து வரும் பணிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டாலும் இது ஒரு விரிவான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல் முறையுடன் இணைந்திருப்பது மிகவும் முக்கியமானது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகளுடன் சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதை நாங்கள் கரிசனையுடன் கவனிக்கிறோம்” எனக் கூறப்பட்டது.

Spread the love