யாழ்ப்பாணத்தில் உல்லாசப்பயணத்துறையினை மேம்படுத்தும் சுற்றுலாத்துறையின் சார்பாக அதிநவீனுல்லாசப்படகு சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலியல் நீரியல் வளத்துறையினை மேம்படுத்திமாவட்டத்தின் சுற்றிலாத்துறையினை ஊக்குவிக்கும்முகமாக உல்லாசப்பயணத்துறை மற்றும் சுற்றுலாத்துறையைக்கவரும் விதமாக உல்லாசத்துறை ஆடம்பரப்படகுச்சேவையின் முதல் நிகழ்வான வெள்ளோட்டம் இன்று பகல் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அவரால் சம்பிராயத பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
யாழ் குடாநாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி சுற்றுலாப்பயணிகளின் ஆசைகளை மேம்படுத்தி பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் கூட்டு நிறுவனம் ஆகியன இணைந்து (Liyana sea food) இத்திட்டத்தினை முன்னெடுத்திருந்தன,
உல்லாசப்பயணத்துறை, சுற்றுலாத்துறையின் கனவினை நிறைவேற்ற கடல் சுற்றுலா கனவுப் படகான “விக்லியா” (“VICLIYA”) படகானது தனது வெள்ளோட்ட நிகழ்வினை இன்றையதினம் குருநகர் இறங்கு துறையில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவினால் நிகழ்த்தி வைக்ப்பட்டிருந்தது..
இக்குறித்த”விக்லியா”உல்லாசப்படகின் வெள்ளோட்டமாநது இடம்பெற்றிருந்த வேளை அதில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்உ சிறப்புரை ஆற்றிய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் குறித்த உல்லாசப்படகுத்திட்டத்தை யாழ்ப்பாண்த்துக்குள் கொண்டு வந்த முதலீட்டாளர்களையும் அத்திட்டத்தினையும் முன்னிலைப்படுத்திப் பாராட்டுதல்களையும் தெரிவித்த அவர் திட்டத்தின் அபார வளர்ச்சிக்கும் அதனது முன்னேற்றகரமானதொழிற்பாட்டுக்கும் இப்பகுதி மகல்களின் ஒத்துழைப்பானது இன்றியமையாதது என்று எடுத்துரைத்தார்.
இத்திட்டமானது இத்தோடு குறுகியதாக நின்று விடாது விரிந்து பரந்து வியாபித்து பல்நாட்டு சுற்றுலாத்துறை உல்லாசப்பயணிகள்் உள்ளீர்க்கும் வகையிலான ஊக்கப்படுத்தலையும் அதுசார்பான மேம்படுத்தப்பட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் தம்மாலான ஒத்துழைப்புக்களைத்தான் நல்க முன் நிற்பதாகவும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார். அத்துடன்இக்குறித்த குளிரூட்டப்பட்ட சுற்றுலாப்பயணிகளுக்கென பிரத்தியேகமான நவீன வசதிகளடங்கிய இப்படகானதின் சேவையானது யாழ்நகரை அண்டிய சிறுத்தீவிலிருந்து முன்னெடுக்கப்படும் என்று அவர்கூறிநின்றார்.