இலங்கையின் எரிபொருள் நெருக்கடி தீர இந்தியா கைகொடுக்கும்

இலங்கையின் பெற்றோலிய நெருக்கடி நிலைமையை வெற்றிகொள்ள தொடர்ந்தும் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொடவிடம், இந்திய பெற்றோலியத்துறை அமைச்சர் ஹர்டீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே இந்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். இலங்கையின் எரிபொருள் பிரச்சினை தீர்வுக்காக இந்தியா ஏற்கனவே வழங்கிய 500 மில்லியன் டொலர் உதவிக்கும் மிலிந்த மொர கொட இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அமைச்சர் ஹர் டீப் சிங் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love