30 பேருடன் சென்ற ஐக்கிய அரபு அமீரக சரக்கு கப்பல் ஈரான் கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் அஸ்ஸலுயே துறைமுகத்தில் இருந்து 30 மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த போது மூழ்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முதல் பாரசீகா முதல் வளைகுடா பகுதியில் கடுமையான வானிலை நிலவி வருவதாக ஈரான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான வானிலையே கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். மீட்பு பணிக்காக ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.