வட கொரியாவின் பலப்பரீட்சை, தோல்வியில் முடிந்த ஏவுகணைச் சோதனை !

வட கொரியா ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்ததாகவும் ஆனால் அது உடனடியாக தோல்வியடைந்துவிட்டதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த சந்தேகத்திற்குரிய ஏவுகணையானது வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிலிருந்து ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணை செலுத்துவதற்காக வடகொரியா தெரிவு செய்த தளம் தான் இதற்கு முன்னரும் ஏவுகணைகளின் பரிசோதனைக்குத் தெரிவு செய்த தளமாகவுள்ளது. இதற்கு முன்னர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நிகழ்த்தியது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது, அத்தகைய ஏவுகணையானது இந்த தளத்திலிருந்துதான் ஏவப்பட்டுள்ளது. அத்துடன் சமீப காலங்களில் வட கொரியா தனது ஆயுதங்களின் சோதனையை அதிகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு செய்திதளமான என்கே நியூஸ், ஏவுகணை சோதனையை கண்டவர்கள் அதிகப்படியான சத்தத்தை கேட்டதாக தெரிவித்தனர் என்று கூறியுள்ளது. இந்த மிதமிஞ்சிய சத்தமானது ஒரு பெரிய விமானம் பறந்ததது போலவும், அது வெடித்தது போலவும் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர் என்று அறிக்கை பகிர்ந்துள்ளது. மேலும் தலைநகர் பியாங்யாங்கில் வானில் சிகப்பு புகை எழுந்ததையும் அவர்கள் கண்டதாக என்கே நியூஸ் தெரிவிக்கிறது.

என்கே செய்தி தளத்திடம் பேசிய கார்னீஜீ என்டவ்மெண்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் என்ற ஆய்வுக்கழகத்தை சேர்ந்த அங்கிட் பாண்டா என்பவர் கூறும் போது, இந்த காட்சியானது ஒரு மிகப்பெரிய தோல்வியை காட்டுகிறது என்றார். மேலும் “அந்த ஓரஞ்ச் மற்றும் சிகப்பு நிற புகை திரவ எரிப்பொருளுடன் தொடர்புடையது. இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது,” என்றார்.

இந்த வருடம் மட்டும்  வட கொரியா இதுவரை ஒன்பது ஆயுத சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் அமெரிக்காவால் கூறப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையும்  அடங்கும். முழு வீச்சிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைக்கான முன்னோட்டம்தான் அந்த கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

சுமார் 5,500 கிமீட்டர் தூரம் பாயக்கூடிய அந்த ஏவுகணையானது அமெரிக்கா வரைக்கும் செல்லக்கூடியது ஆகும் அத்துடன்  அது ஆணு ஆயுதங்களைக் காவிச் செல்லக்கூடிய வகையில்   வடிவமைக்கப்பட்டது. முன்பே வட கொரியாயாவானது பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களைச் சோதனை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்திருந்தது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனையை நிறுத்தி வைத்திருந்தது வட கொரியா. ஆனால் 2020ஆம் ஆண்டு தான் இந்த உறுதியைக் கைவிடப்போவதாகவும்  கிம் ஜாங் உன் தெரிவித்தார். இருப்பினும் பிப்ரவரி 26ம்திகதி மற்றும் மார்ச் 4ஆம் தேதி ஆகிய திகதிகளில்  நடைபெற்ற சோதனைகள் உளவு செயற்கைக்கோள் உருவாக்கத்தின் ஒரு பகுதியே என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

Spread the love