ஜோர்தான் இளவரசர் Hamza bin al-Hussein தமது பதவி மற்றும் சிறப்புரிமைகள் அனைத்தையும் கைவிடுவதாக அறிவித்துள்ளார். வௌிநாடுகளினால் உருவாக்கப்பட்ட சதிக்கமைவாக முடியாட்சியை சீர்குலைக்க முயற்சித்ததாக கடந்த ஏப்ரல் மாத்தில் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன், கடந்த வருடத்தில் அவர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
ஜோர்தான் அரச நிறுவனங்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் கடந்த சில வருடங்களாக தாம் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டில் மன்னர் ஹூசைன் காலமானதை தொடர்ந்து ஹம்சா முடிக்குரிய இளவரசராக பெயரிடப்பட்டார். அவரது சகோதரர் அப்துல்லா தனது மகனை அடுத்த மன்னராக பெயரிட்ட நிலையில், ஹம்சாவின் முடிக்குரிய இளவரசர் என்ற நிலை பறிபோனது.