ஜனாதிபதி பதவி விலகமாட்டார். என அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் ஜனாதிபதி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என அரசின் பிரதம கொறடா நாடாளுமன்றில் கூறியுள்ளார்.