சுதந்திரத்திற்குப் பின்னர் கொழும்பு எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்காக, இந்தியாவும் இலங்கையும் அடுத்த வாரம் தங்கள் அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு உட்பட உயர்மட்ட ஆலோசனைகளை ஆரம்பிக்கின்றன.
புதிய நிதியமைச்சர் அலி சப்ரி, சர்வதேச நாணய நிதியத்தின் சந்திப்புகளை முன்னிட்டு, அடுத்த வாரம் வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு இந்திய அமைச்சர்மட்ட தூதுக்குழுவை சந்திப்பாரென்று எதிர்பார்க்கப்படுகிறது, இது புதுடில்லியில் இருந்து இலங்கைக்கான புதிய சுற்று உதவியை உறுதிப்படுத்துகின்றது என்று எகனாமிக்டைம்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.
அதேசமயம், இலங்கையின் பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழு, மத்திய வங்கி ஆளுநர் , திறைசேரி செயலாளர் ஆகியோர் இந்தியாவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர், இந்தியாவின் தரப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் பொருளாதார விவகார செயலாளர் கலந்து கொள்கிகின்றனர்.