எரிவாயு விலையை அதிகரிக்கும் தீர்மானம் கைவிடப்பட்டது

எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்கும் தீர்மானம், அரசாங்கத்தின் அறிவிப்பிற்கமைய கைவிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (22) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை 5175 ரூபாவாக அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்தது.

குறைந்த விலையில் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதால் நாளாந்தம் தமது நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்படுவதாக தெரிவித்தே லிட்ரோ நிறுவனம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அறிவித்தது.

இந்த தீர்மானம், அரசாங்கத்தின் அறிவிப்பிற்கமைய கைவிடப்பட்டுள்ள நிலையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் முந்தைய விலையான 2750 ரூபாவிற்கு தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதனிடையே, மற்றுமொரு தொகுதி சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் குறித்த எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love