போலந்து மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா இன்று(27) நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
நட்புறவற்ற நாடுகள் எரிவாயுவிற்கான கட்டணத்தை ரஷ்ய ரூபிள்களில் (Rouble) செலுத்தவேண்டும் எனவும் இல்லையெனில் விநியோக நடவடிக்கைகள் குறைக்கப்படும் என ரஷ்யா அறிவுறுத்தியிருந்தது.
எனினும், அவ்வாறு பணம் வழங்குவதற்கு குறித்த இரு நாடுகளும் மறுத்துவிட்டன. போலந்து 53 வீதமான எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்ததுடன் பல்கேரியா 90 வீதமான எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்றுக் கொண்டது.