அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய சக்தி பாத யாத்திரை நேற்றுக் கண்டியில் இருந்து ஆரம்பமானது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தப் பாதயாத்திரை போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்தப் பேரணி எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பை அடையவுள்ளது. அதன் தொடர்ச்சியாக சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் மே முதலாம் திகதி நூற்றாண்டின் மே பேரணி நடைபெறவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.