பாகிஸ்தான் வரலாற்றில் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதியரசர் என்ற பெருமையை ஆயிஷா மாலிக் பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக ஆயிஷா மாலிக்கை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி முதன் முதலாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரைக்கு பாகிஸ்தான் சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஆயிஷா மாலிக், உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டால், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்படும் என பாகிஸ்தான் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் லாதிஃப் அப்ரிடி எச்சரித்திருந்தார். நீதிபதிஆயிஷா, சிரேஸ்டத்துவ அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளதால் அவரை உயர்நீதிமன்றுக்கு அனுப்புவது தவறு என பாகிஸ்தான் சட்டத்தரணிகள் சங்கம் கூறியிருந்தது. எனினும் பாகிஸ்தான் நீதித்துறை ஆணையத்தின் கூட்டத்தில், நீதிபதி ஆயிஷாவை உயர்நீதிமன்ற நீதியரசராக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.