ஊழியர் சேமலாப நிதியத்தின் இலாபம் மீது 25% மிகைக் கட்டண வரி அறவிடும் முயற்சிக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஊழியர் சேமலாப நிதியங்களின் இலாபம் மீது 25% மிகைக் கட்டண வரி அறவிடும் யோசனை தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த யோசனையை மீளப்பெறுமாறு வலியுறுத்தி அனைத்து நிறுவன ஊழியர் சங்க உறுப்பினர்கள் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழில் அமைச்சிற்கு முன்பாக ஒன்று கூடினர். ஆர்ப்பாட்டத்தின் போது அவ்விடத்திற்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சென்றதையடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.