IMF அதிகாரிகளினால் இலங்கை அமைச்சரவைக்கு தௌிவூட்டல்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இதனை அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் நிதி வசதியை வழங்க பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதி பங்களிப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்ததுடன் அமைச்சர்களும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை மற்றும் அதற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் அமுல்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Spread the love