சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றில் ஆரம்பமாக உள்ளது.
இன்று (26) முதல் நாளை மறுதினம் வரையில், குறித்த விவாதத்தை முன்னெடுப்பதற்கு, அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதது. சர்வதேச நாணய நிதியத்தினால், 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட, 2.9 பில்லியன் டொலர் நிதி வசதி வழங்கப்படுகிறது. இந்த உடன்படிக்கை, கடந்த மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவையான சகல அங்கீகாரமும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென இந்தத் தீர்மானத்தினால் முன்வைக்கப்படுகிறது. மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து, தேவையேற்படின் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.