போர் தொடுக்கும் எண்ணம் இல்லை, பேச்சுவார்தைக்கு தயார்-ரஷ்ய அதிபர்

உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்தைக்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோவியத் நாடுகளில் ஒன்றான உக்ரைன் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தரும் நிலையில் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எதிர்ப்பு

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் எல்லையில் படைகளை குவித்து பதற்றத்தை ஏற்படுத்திவருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்க உக்ரைன், ரஷ்யாவுக்கு 48 மணி நேரம் கெடு விதித்திருந்தது.

போர் விமானங்கள்

போர் விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டிருந்த சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தன. இதனால் இன்றைய தினம் ரஷ்யா , உக்ரைன் மீது போர் தொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் நேற்றைய தினம் திடீரென விலக்கப்பட்டது.

Spread the love