பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய மெய்வல்லுநர் சம்மேளனத்திற்கான (பங்கபந்து ஷெய்க் முஜிப்டாக்கா மரதன் 2023 போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையின் சுஜானி பியூமிக்கா மதுமாலி பெரேரா வெள்ளிப்பதக்கம் வென்றார். தெற்காசிய மெய்வல்லுநர் சம்மேளன நாடுகளைச் சேர்ந் தரூணடிளி; பெண்களுக்கான அப்போட்டியில் நேபாளத்தின் புஷ்பா பந்தாரி வெற்றிபெற்று (2 மணி. 48.02 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இலங்கை வீராங்கனை மதுமாலி பெரேரா 20 செக்கன்கள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று (2:48.22) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.இந்தியாவின் அஸ்வினி மதன் ஜாதவ் (2:52.32) வெண் கலப் பதக்கதைப் பெற்றதுடன் இலங்கையின் வத்சலா மதுஷானி ஹேரத் (2:54.20) நான்காம் இடத்தைப் பெற்றார். தெற்காசிய மெய்வல்லுநர் சம்மேளனத்திற்கான ஆண்கள் பிரிவில் பங்குபற்றிய இலங்கையர்களில் சிசிர குமாரவன்னி நாயக்கவினால் (2:24.48) 5ஆவது இடத்தையே பெற முடிந்தது.
அப்போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை இந்தியர்கள் வென்றெடுத்தனர்,பங்ரியா விக்ரம் பாரத் சிங் (2:18.28), அனில் குமார் சிங் (2:20.30), ஷேர் சிங் (2;2035) ஆகிய இந்திய வீரர்களே முதல் 3 இடங்களைப் பெற்றனர். நேபாளத்தின் சந்தோஷ் பிக்ரம் பிஸ்டா (2:24.03) 4ஆம் இடத்தைப் பெற்றார்.
