சைக்கிளில்(மிதி வண்டியில்)வேலைக்குச் செல்லுமாறு அரசாங்கம் மக்களிடம் முன்மொழிகிறது எனவும்,எனினும் இவ்வாறான பிரேரணைகளை முன்வைப்பவர்கள் V8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தாங்கள் நியதியில் இருப்பதாகத் தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு”மற்றும் ‘ஜனசுவய’ ஆகிய நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணைந்தாக மீகொட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு இன்று (27) காலை எதிர்க்கட்சித் தலைவரால் முச்சக்கர வண்டியொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது.
அந்த நிகழ்விலேயே சஜித் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். சுபிட்சத்தின் தொலைநோக்கிற்குப் பதிலாக துன்பத்தின் தொலைநோக்கே உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாடு முழுவதும் பால் மா,எண்ணெய் மற்றும் சிமெந்து போன்றன கொள்வனவு செய்ய வரிசைகள் உருவாகியுள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும் இப்போது போட்டியாக தவிசாளர்கள் இராஜினாமா செய்கிறார்கள் எனவும், திருட்டு, இலஞ்சம்,ஊழல்,மோசடிகள் இதில் உள்ளமை காரணமாகவே இத்தகைய இராஜினாமாக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்
கொவிட் அனர்த்தத்தினால் எமது நாடு பாரிய தொற்றுநோயை எதிர்நோக்கியிருக்கும் வேளையில்,நாட்டின் காலாவதியான அரசியலை மாற்றியமைத்து எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாட்டுக்கு பெறுமானம் சேர்த்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மற்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.