திராட்சை ரசம் (wine) கொரோனவை தடுக்குமா?

வையின் பருகுவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்று ஆய்வில் மூலம் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மது அருந்துபவர்களை கொரோனா ஒன்றும் செய்யாது’ என்று மதுப்பிரியர்கள் சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அது சரியாக இருக்குமோ என்று எண்ணத்தூண்டும் வகையில், அண்மையில் வெளியான ஒரு ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது. ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல இதழில் வெளியான அந்த ஆய்வுக்கட்டுரை, அதன் கண்டுபிடிப்புகளுக்காகவே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரம் 1 முதல் 4 கோப்பை சிவப்பு வையின் பருகுவது, கொரோனா தொற்று பாதிப்பு அபாயத்தை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கிறதாம்.


அதேவேளையில், வாரம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைகள் சிவப்பு வையின் அருந்துவதால் கொரோனா அபாயம் 17 சதவீதம் அளவுக்கு குறைகிறதாம். இந்த விஷயத்தில் வெள்ளை வையினிலும், சாம்பைனும் கூட நன்மை அளிக்கின்றன என்றாலும், அவற்றின் பலன் சிவப்பு வையினுடன் ஒப்பிடும்போது குறைவுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Spread the love