அமெரிக்காவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், மாணவரொருவர் உயிரிழந்தார். அமெரிக்காவில் கொரோனாப் பாதிப்புகள் அதிகரித்த போதும், ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பாடசாலைகள் யாவும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், மின்னசோட்டா மாகாணத்தில் பாடசாலையொன்றின் அருகே இரு மாணவர்கள் துப்பாக்கியினால் சுடப்பட்டு கீழே கிடந்துள்ளனர், இந்தச் சம்பவத்தையடுத்து. அங்கு வந்த பொலிஸார்,அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த மற்றுமொரு மாணவர், தீவிர சிகிச்சை பெறுகின்றார். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் மாணவர்களின் வயது விபரங்கள் போன்றவற்றை, பொலிஸார் வெளியிடவில்லை .