தேவைப்பட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவும் தயார் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவை உறுப்பினர்கள்ளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை குறைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளார். இத்தீர்மானத்தை முன்வைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது அமைச்சர்வைப் பதவிகளை இராஜினாமா செய்து ஏனைய அமைச்சர்களுக்கு முன்னுதாரணமாக செயற்படவேண்டும். அப்படியானால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை முன்னுதாரணமாகக் காட்டத்தயார் எனவும் தெரிவித்துள்ளார்.