பேராபத்திலிருந்து நாட்டை மீட்க அரசு பதவி விலகுவதே சிறந்தது- சந்திரிகா

நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இல்லை. பொருளாதாரம் பலமிழந்த நாடாகக் காணப்படுகிறது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் தீர்வோ மாற்றுத்திட்டமோ கிடையாது எனவே அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது “நாட்டின் பொருளாதாரம் பலமிழந்து சென்று விட்டது இந்த நிலையில் சர்வகட்சி மாநாடு கூடுவதனால் எந்தப்பிரயோசனமும் வரப்போவதில்லை. சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டுவதனால் மாற்றமேதும் ஏற்படப்போவதில்லை. இந்த அரசானது ஆரம்பத்திலிருந்தே புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் தனது ஆட்சியை நடாத்திச் சென்றதால் தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது. இதை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் இதனைப் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சியமைக்க ஆணைவழங்கிய அனைத்து மக்கள் குழுக்களும் இன்று நடு வீதில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். பொருட்களின் விலையேற்றத்தாலும், அத்தியாவசிய
பொருட்களின் பற்றாக்குறையாலும் மக்கள் இன்று செய்வதறியாது திண்டாடுகின்றனர். எனவே, பட்டினிச்சாவால் மக்களும், நாடும் அழிந்து விடாமலிருக்க அரசாங்கம் உடனே பதவி விலகவேண்டும் அப்போதுதான் நாட்டையும், மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” என்றார்.

Spread the love