அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

பொருளாதார நெருக்கடியால் கட்டுப்படுத்த முடியாதளவு விலை அதிகரித்துள்ள நிலையில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபாயிற்கும் ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாயிற்கும் ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உச்சபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நாடு முழுவதிலும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. தனியொரு வர்த்தகர் இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமோ, ஆறு மாத கால சிறைத்தண்டனையோ அல்லது இந்த இரண்டு தண்டனைகளோ விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Spread the love