ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர கடனுதவி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் இந்த கடன் உதவிக்காக திருப்பி விடப்பட்டுள்ளதாக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஏழைகளுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் இதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறைந்தது 3 மாதங்களுக்கு இந்தத் திட்டம் தொடரும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமுர்த்திமானியத் திட்டம், முதியோர் மற்றும் தனி நபர்களுக்கான கொடுப்பனவுகள் உட்பட, மாதாந்திர ரொக்க மானியத்தொகை தற்போதுள்ள சமூக உதவித் திட்டங்களின் பயனாளிகளின் எண்ணிக்கையில் இதனால் தற்காலிக அதிகரிப்பு ஏற்படும். பல்வேறு குறைபாடுகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கான உணவு வவுச்சர்களின் மாதாந்திர மதிப்பை தற்காலிகமாக உயர்த்தி, பண மானியத்துடன் மாற்றப்படும், மேலும் 2 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் இந்தத் திட்டம் ஆதரவை வழங்கும்.