ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள், தாவர இனங்கள்..

உலகில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள், உலக பாதுகாப்பு ஒன்றியத்தின் ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் இருப்பதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உயிரினங்களில் வியத்தகு விழ்ச்சியை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து காட்டு இனங்களின் எண்ணிக்கை சராசரியாக 69 விகிதம் குறைந்துள்ளது. இயற்கை பாதுகாப்பு அமைப்பு ‘உலகளாவிய இனங்கள் அழிவின் பேரழிவு மோசமடைந்து வருகிறது’ என்று எச்சரித்துள்ளது. பனிமான்,

எம்பெரர் பென்குயின்கள் உள்ளிட்டவை சிவப்பு பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வடக்கு பகுதியான டைமிர் பகுதியில் வசிக்கும் பனிமான்கள், கடந்த 2000 ஆம் ஆண்டில் 10 இலட்சமாக இருந்த நிலையில், தற்போது, நான்கில் ஒரு பகுதியாக குறைந்து விட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, எம்பெரர் பென்குயின் இனங்கள் அழிவை நோக்கி செல்வதாகவும், 2100ம் ஆண்டளவில் முற்றிலும் அழிந்து போகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றமும், வேட்டையாடுதலுமே இதற்கு முதன்மை காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேபாள புலிகளின் எண்ணிக்கையும், அவுஸ்திரேலியாவில் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love