பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பண்ணஹெக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரிக்கொள்கைக்கு எதிராக எதிர்வரும் 13ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள பல தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்காக 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.