ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்தன. எதிராக 7 நாடுகள் வாக்களித்தன. 20 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் பிரித்தானியா தலைமையில் அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொண் டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட நாடுகளின் இணை அனுசரனையுடன் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்த நிலையில் சீனா, பாகிஸ்தான், பொலிவியா, கியூபா, எரித்திரியா, உஸ்பெகிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, ஆர்ஜென்ரினா, ஆர்மெனியா, குரோசியா, பின்லாந்து, ஹோண்டுராஸ் , லிதுவேனியா, லக்சம்பேர்க் , மலாவி, மார்ஷல் தீவுகள், மசிடோனியா, மெக்சிகோ, மொண்டினீக்ரோ, நெதர்லாந்து, பராகுவே, ஸ்கொட்லாந்து, கொரியா, உக்ரைன் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, ஜப்பான், பிரேசில், இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், குவைத், கட்டார், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகிக்கொண்டன. 5 இதேவேளை, நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட சில திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் தொடர்பான சாட்சியங்களைச் சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு தீர்மானம் அழைப்பு விடுக்கிறது. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் 46/1 தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சாட்சியங்களைச் சேகரிக்கும் பொறிமுறை பணிகளை தொடர மேலதிக வளங்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் கோருகிறது. சிவில் நிர்வாகத்தில் இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை வழங்கப்படாமை போன்ற முக்கிய விடயங்கள் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த பிரேரணையை தீர்மானம் வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணை வலியுறுத்துகிறது. தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை வழங்கப்படாமை போன்ற முக்கிய விடயங்கள் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தத்தை குறித்த பிரேரணையை தீர்மானம் வரவேற்றுள்ளதுடன், நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் மிகுந்த பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்தப் பிரேரணை வலியுறுத்துகிறது.