யுனிசெப் அமைப்பு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை சிறார்களுக்காக மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளது. இந்த மனிதாபிமான உதவிக்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த சிறார்களில் பெரும்பாலானோர் ஊட்டசத்து குறைப்பாடு போன்ற காரணிகளால் மரணிக்க கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர், மோசமான பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை முகங்கொடுத்துள்ளதாக அந்த அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மதிப்பீட்டுக்கமைய, 5.7 மில்லியன் சிறார்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சிறார்களில் இருவரில் ஒருவருக்கு போசாக்கு, சுகாதார சேவை, சுத்தமான குடிநீர், கல்வி, மனநல சுகாதாரம் உள்ளிட்ட அவசர உதவிகள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.