நாட்டின் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நேற்று (19/01) குறித்த நன்கொடையினை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கி, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நாடளாவிய ரீதியில் உள்ள 9 வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கையளித்துள்ளார்.
இதன்படி தெல்தெனிய, வரகாபொல, வெலிகந்த, பிம்புர, கரவனெல்ல, அவிசாவளை, நாவலப்பிட்டி மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய ஆதார வைத்தியசாலைகள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலை பி.சி.ஆர். ஆய்வகத்திற்கு தேவையான உபகரணங்கள் இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நீண்ட கால அர்ப்பணிப்புக்காக ஜப்பான் அரசாங்கம் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.