நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு மிகவும் குறைவடைந்து, மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையிலிருக்கும் இலங்கையின் 74வது சுதந்திரதின உரையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ வெளிநாடுகளிலுள்ள தனது பிரசைகளை நாட்டிற்குள் நிதியை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பால் மா, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அன்னியச் செலாவணிப் பற்றாக்குறை காரணமாக, உற்பத்திப் பொருட்களுக்கான மூலப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாமற் போனதுடன் மோசமான பணவீக்கத்தினையும் அது ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் சார்ந்திருக்கும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு இந்த கோவிற் பெருந் தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் 14 பில்லியன் டொலர் வருமானத்தை இலங்கை இழந்துள்ளதாக அரசாங்கம் கணிப்பிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி, ஜூலை-செப்டம்பர் 2021 இல் இலங்கையின் பொருளாதாரம் 1.5% வீழ்ச்சியடையும் என மதிப்பிட்டிருந்ததது.
தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய அவர், “வெளிநாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களையும் தங்கள் தாயகத்தில் முதலீடு செய்யும்படி அழைக்கிறேன்” என சனாதிபதி கொட்டாபய இராஜபக்ஷ கூறினார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் நிதி தாய்நாட்டின் மிகப் பெரும் வளம் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் முக்கிய நிறுவனமொன்ரின் தரவுகள், கடந்த டிசம்பரில் இடம்பெற்ற பணப் பரிமாற்ற நடவடிக்கை முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது 60% குறைவடைந்ததைக் காட்டியது. கடந்த வருடம் இலங்கையின் மொத்த வெளிநாட்டு நாணயமாற்றுச் செயற்பாடுகள் 22% குறைவடைந்தது. வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் மேற்கொண்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.
வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடுகாரணமாக இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை துறைமுகங்களில் இருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை. உற்பத்தியாளர்களால் மூலப்பொருட்களை வெளிநாடுகளில் கொள்வனவு செய்ய முடியவில்லை.
ஏற்கனவே, இலங்கை சர்வதேச கடன்பத்திரங்கள் (sovereign bonds) மூலம் பெற்றுக்கொண்ட 15 பில்லியன் டொலர் கடனைச் திரும்பவும் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது.
தான் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்துவதற்காக அரசாங்கம் தனது கையிருப்பை சிறிது சிறிதாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் எவையும் நீண்ட கால பிரச்சனைகள் அல்ல. நம்பிக்கையுடன் அணுகுவதன் ஊடாக அவற்றுக்கான தீர்வினை காணமுடியும்” என்று ராஜபக்ச கூறினார்