இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது. எனினும், தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளிலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடு உள்ளதாக இந்திய இணையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இரண்டு தரப்புக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை தொடர்பிலேயே இந்த முரண்பாடு நிலவுகிறது. இலங்கையின் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவின் கூற்றுப்படி, ஏப்ரல் 29ஆம் திகதியன்று காரைக்காலுக்கும் காங்கேசன்துறைக்கும் புதுச்சேரி ஊடாக இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழக தரப்பில் ராமேஸ்வரத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான வழித்தட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பின்னர் புதுச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இந்த வழித்தட யோசனைகள் இறுதிச்செய்யப்படவில்லை. இந்தநிலையில், இந்த பயணிகள் கப்பல் சேவையை அதானி குழுமம் பொறுப்பேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த சேவை இது மாத இறுதிக்குள் இல்லாவிட்டாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக இந்திய இணையத்தளம் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love