இலங்கையின் கடன் 104.6 வீதமாக அதிகரிப்பு

இலங்கையின் பொதுக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 2018 – 2022 வரையான இலங்கையின் நிதி முகாமைத்துவம் மற்றும் அரசகடன் கட்டுப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன.


31 டிசம்பர் 2019 நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86.8 வீதமாக இருந்த பொதுக்கடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் 17.8 வீதமாக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து கடன் தரமதிப்பீடுகளை படிப்படியாகக் குறைப்பது தொடர்பான நிலைமையைத் தணிக்க இலங்கை மத்திய வங்கியோ அல்லது நிதியமைச்சோ பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை தேசிய கணக்காய்வு அலுவலகம் அவதானித்துள்ளது. இலங்கையில் தனிநபர் கடனின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 இல் 257 வீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love