இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா உறிதியளித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சகத்தில் நேற்று 09ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளரைச் சந்திக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லீஜியாங்மே பதிலளிக்கும்போதே இக்கருத்தினைத் தெரிவித்தார்.
இலங்கை – சீனா ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் பரஸ்பரம் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இரு நாடுகளும் தம் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் இணைந்து ஆதரித்தே வந்துள்ளன என வெளிவிவகார அமைச்சின் அதிகாரி கூறியிருந்தார்.
மேலும் ஊடகவியலாளர் சிலர் இலங்கை சீனாவிடம் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்கான பொறிமுறையில் மறுசீரமைப்பு குறித்து பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு, இலங்கையின் தற்போதைய தளம்பல் நிலை விரைவில் மாற்றத்தைச் சந்திக்கும். இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் முயற்சியுடனும் ஒத்துழைப்புடனும் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக நெருக்கடி நிலைமை விரைவில் வெற்றிக் கொள்ளப்படும் என தெரிவித்த அவர், இலங்கை எதிர்காலத்தில் பாரிய அபிவிருத்தியடையும் என நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டார்.