இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டத்தின் செயலாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய நடுத்தர வருமான நாடுகளை விட இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உணவுப் பணவீக்கம் 90 சதவீதத்தை எட்டியுள்ளதால் அது வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை பாதித்துள்ளதாகவும் இதனால் மில்லியன் கணக்கான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் உதவி தேவைப்படுபவர்களாகவும் இருப்பதாகவும், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் குறிப்பிடுகிறது.