ஈஸ்டர் தாக்குதல்- பாப்பரசரை சந்தித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் நேற்று நடைபெற்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. காலம் கடந்தாலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவின் அவசியம் குறித்து திருத்தந்தையிடம் கர்தினால் தெரிவித்ததாக கொழும்பு உதவி ஆயர் ஜே.டி.அந்தோனி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. நீதிக்கான இலங்கை கத்தோலிக்கர்களின் போராட்டம், இன்று வரை இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை எடுத்துள்ள நடவடிக்கைகள், அதற்குக் காரணமானவர்களை அடையாளம் காண்பதில் அலட்சியம் ஆகியவை குறித்து கர்தினால் விளக்கியதாகவும் குறிப்பிட்டார். கொழும்பு பேராயர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதவி ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Spread the love