ரஷ்யாவுக்கு உக்ரைனுக்குமான மிக பயங்கரமான மோதல் வெடித்துக்கொண்டிருக்கும் இந்நாளில் ரஷ்ய செய்தி நேரலை ஒன்றில் பதாதைகளுடன் உக்ரைனுக்கு ஆதரவாக வந்த செய்தியாளர் ஒருவர் கைதாகியுள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதி முதல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட பல நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவில் செய்தி நேரலையின் போது உக்ரேன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பதாதையுடன் வந்த ஊடகவியலாளர் ஒருவரை மாஸ்கோ நகர பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கண்டனத்தையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இது குறித்து வெளியான வீடியோக்கள் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.