உக்ரைனின் துறைமுக நகரம் முற்றுகை: சிதையும் மரியுபோல்..

ரஷ்ய துருப்புக்களின் தீவிர தாக்குல், முற்றுகை, காரணமாக உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நிலைகுலைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மரியுபோல் நகரம் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது, குடியிருப்பு பகுதிகளின் மேல் தொடர் ஏவுகணைத்தாக்குதல்கள் காரணமாக கட்டடங்கள் அழிந்து மயானம் போல் காட்சி தரும் மரியுபோலில் இருந்து மக்களில் பலரை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.

உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவோம் என களமிறங்கிய ரஷ்ய துருப்புகள் 24 நாட்களாக தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். வரைபடத்தில் இருந்தே மொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது மரியுபோல் நகரம். இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ளனர் இவ்வேளை, அத்தாக்குதலில் சிக்கி பலியானவர்களை மீட்க முடியாமல் உறவினர்களும் அதிகாரிகளும் தவித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக சுமார் 400,000 மக்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மரியுபோல் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

Spread the love