கத்தோலிக்க மக்கள் மற்றும் ஆயர்கள் நேற்று(20) பாரிய நடைபவனியொன்றை முன்னெடுத்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) 04 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என கத்தோலிக்க சபை சுட்டிக்காட்டியுள்ளது. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இன்றிரவு(20) 9 மணிக்கு இந்த நடைபவனி ஆரம்பமாகவுள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பேச்சாளர், அருட்தந்தை ஜூட் க்ரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.