ஆதார வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாகக் காணப்படும் அத்தியாவசிய மருந்துகளை உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு அவசியமான மருந்துகள் இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உலக வங்கி செயற்றிட்டத்தின் பணிப்பாளர், வைத்தியர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மருந்துகள் விரைவில் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல் வைத்திய நிலையங்களுக்கு அவசியமான மருந்துகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.