கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கமு/கமு கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் பாண்டிருப்பைச் சேர்ந்த பத்மநாதன் சுலோஜினிதேவி தம்பதியினரின் புதல்வன் லதேஸ் எனும் மாணவனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நடைபெறாமல் தடுப்பதற்காக Gas Safe Box எனும் புதிய கண்டுபிடிப்பொன்றை உருவாக்கியுள்ளார்.
எரிவாயுவின் சிலிண்டரிலிருந்து அதிக எரிவாயு கசிவு ஏற்படும் போது, எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கின்றன. அடுப்பில் உள்ள Sensor மூலம் வெடிப்பதற்கு முன்னரே Gas Safety Box உள்ள System ஆனது எரிவாயு கசிவை கட்டுப்படுத்துகின்றது. இதன் மூலம், எரிவாயு அடுப்பு வெடிப்பதை தடுப்பது மட்டுமன்றி மேலதிகமாக கசிவில் உள்ள எரிவாயுவையும் மீதப்படுத்துகிறது. எனவே, இதனால் எந்தவித சேதமுமின்றி பாதுகாப்பாகவும் பயமின்றியும் மக்கள் தங்களது சமையல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.