எல்.பி.எல். வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான காலம் நீடிப்பு

இந்த வருடம் நடைபெறவுள்ள எல்.பி.எல் 3 ஆவது கிரிக்கெட் தொடரில் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு அமைய எல்.பி.எல் கிரிக்கெட் 3 ஆவது போட்டியில் பதிவு செய்ய விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் ஜூன் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்களைப் பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பல வெளிநாட்டு வீரர்களினாலும் அணி உரிமையாளர்களினாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைக் கருத்தில்கொண்டு பதிவு காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது. ஆரம்பத்தில் வீரர்கள் பதிவுகள் ஜூன் 23 ஆம் திகதியுடன் நிறைவுபெறுவதாக இருந்தது.

புதிய மாற்றத்துக்கு அமைய ஜூன் மாதம் 28 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வெளிநாட்டு வீரர்கள் தங்களைப் பதிவுசெய்யலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் பதிவுகள் வெவ்வேறு தர நிலைகளில் பதிவு செய்யப்படுவதாக ஸ்ரீகலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

Spread the love