தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, எழுதியிருக்கும் “ஒன்பது; “காலி முகப்புப் போராட்டத்தின் உள் கதை” பற்றிய நூல் ஏப்ரல் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் வெளியிடப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 09 ஆம் திகதி வரை வீசிய காலி முகத்திடலின் சூறாவளியின் மறைக்கப்பட்ட கதையை தான் இந்நூலில் வெளிப்படுத்துவதாகவும், இந்த மறைக்கப்பட்ட உண்மையை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ளாவிட்டால் இலங்கையை மற்றொரு ஹைட்டி, லிபியா அல்லது ஈராக் ஆக மாறுவதை தடுக்க முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எனவே, எவ்வாறான சவால்கள் வந்தாலும், இந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொணருவது மீள முடியாத பொறுப்பு எனவும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றவே இந்நூல் முயற்சித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். புத்தக வெளியீட்டு விழா இரண்டு விரிவுரைகளை உள்ளடக்கியது மற்றும் அந்த விரிவுரைகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாலி வளாகத்தின் பேராசிரியர் டியூடர் வீரசிங்க மற்றும் புத்தகத்தின் ஆசிரியர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் வழங்கவுள்ளனர். இந்த நிகழ்விற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தேசிய அமைப்புகளின் தலைவர்கள், தூதுவர்கள், இராஜதந்திர உத்தியோகத்தர்கள் மற்றும் புலமை வல்லுனர்கள் உட்பட பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.