இந்த வருடத்திற்கான இந்திய பிரிமியர் லீக் ஐ.பி.எல் ரி-20 தொடரை தமது நாட்டில் நடத்த முடியும் என தென்னாபிரிக்க கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், குறித்த தொடரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே தென்னாபிரிக்கா இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் ஐ.பி.எல் ரி-20 தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதில் ஏற்படும் செலவீனத்தை விடவும் குறைந்தளவில் நடத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த கோரிக்கை தொடர்பில் தற்போது இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.