கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இலங்கையின் கடனாளிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்ற விதம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் கூறியதாவது, கடன் குறையுமா?, கடனை செலுத்த கொடுக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? அல்லது வட்டி குறைக்கப்படுமா? இது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இலங்கையில் 2023-2027 க்கு இடையில் 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவெளி காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் சுமார் 17 பில்லியன் டொலர்கள் பெறப்படவுள்ள கடன் நிவாரணத்தின் மூலம் ஈடுசெய்யப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். எஞ்சிய 07 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நிதியுதவியின் மூலம் ஈடுகட்ட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.