கனேடிய அரசாங்கத்தால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பயண எச்சரிகைக்கு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து செல்வதாகவும், உணவு,மருந்துப்பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் கனடா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
எனினும் இந்த பயண எச்சரிக்கை நியாயமற்றது என இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கனேடிய அரசாங்கத்தின் பயண எச்சரிக்கை தொடர்பாக இராஜதந்திர அடிப்படையில் பேச உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுநிலை அட்மிரால் ஐயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் இந்த விடயம் பற்றி பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.