கனேடிய பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்

தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக கனடாவில்பார ஊர்தி ஓட்டுநர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளர்.

கனடாவில் கொரோனா தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார ஊர்தி ஓட்டுனர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்த ஆரம்பித்துள்ளனர். போராட்டக்காரர்கள் தமது பார ஊர்திகளை தலைநகர் ஒட்டாவாவிற்கு பெருமளவில் நகர்த்தி வருவதால் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறலாம் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தலைநகர் ஒட்டாவாவில் உள்ள கனேடிய பிரதமரின் வாசஸ்த்தலத்திலிருந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடும் குளிர் நிலவி வரும் சூழலிலும் பாராளுமன்ற வளாகத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதால் குறித்த பகுதியில் பொலிஸார் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Spread the love