காணாமல் போனோரை கண்டறியும் செயலகத்தின் தலைவர் சாளிய பீரிஸ் விரைவில் சாட்சியத்திற்கு அழைக்கப்படுவார் என ஓய்வு பெற்ற நீதியரசர் நவாஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை எடுத்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக தற்போது பணியாற்றும் ஏ.எச்.எம்.டி நவாஸ் இஹிறியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஆணைக்குழு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அதன் பணியில் இருந்த சமயம் சாட்சி கூறிய ஒருவர் காணாமல் போனோர் அலுவலகத்தில் பதிவு செய்தபோது அவர்கள் முன் இடம்பெற்ற விசாரணைகளில் தமக்கான அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமே உண்டு எனத் தெரிவித்தார் எனச் சாட்சியம் அளிக்கப்பட்டபோதே தற்போதைய ஆணைக்குழுவின் தவிசாளர் சாலிய பீரிசை விரைவில் சாட்சியம் கூற நாம் கூப்பிடவுள்ளோம் என்றார்.