பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று தீவிரம் காட்டத்தொடங்கி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் சற்றே குறைய தொடங்கி வருகிறது.
நேற்று அங்கு ஒரே நாளில் 1,08,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம் பிரிட்டனில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.55 கோடியைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.52 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டனில் கட்டாய முகமூடிகள் உட்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது என அறிவித்தார்
மேலும், ஒமைக்ரான் அலை இப்போது தேசிய அளவில் உச்சத்தை எட்டியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இனி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இனி இல்லை என தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தொற்று குறைந்துவரும் நிலையில், இம்மாத இறுதியில் கட்டுப்பாடுகள் தேவைப்படாது என பிரிட்டனின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.