துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் கடன் வசதி வீதத்தினை நிலையான வகையில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் கடன் வசதி வீதத்தினை முறையே 15. 50% மற்றும் 16.50% ஆக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.